குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவில் அப்பகுதியாக நடந்த சென்றார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஃபைசல் கான் ( 37) என்பவர் மாணவியை வலுக்கட்டாயமாக அழைத்து சென்று பலாத்காரம் செய்தார். இது குறித்து மாணவியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஃபைசல் கானை கைது செய்தனர். இந்த நிலையில் பிளஸ் டூ மாணவி பலாத்கார சம்பவத்தில் பைசல் கானுக்கு உதவியாக மாறன் கோணம் பகுதியை சேர்ந்த ரத்தீஷ் (27) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மகளிர் போலீசார் ரத்தீஷ் மீது போக்சேவில் வழக்கு பதிவு செய்து அவரை நேற்று கைது செய்தனர்.