பேரறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்த எம்.பி.கே ஆர்.என் ராஜேஷ்குமார்.
பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் பேரறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று தமிழ்நாடு முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளினை சிறப்பிக்கும் வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், அண்ணா மிதிவண்டி போட்டியினை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, தலைமையில், மேயர் து.கலாநிதி முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளினை சிறப்பிக்கும் வகையில் 13 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு 15 கி.மீ தூரமும், மாணவியர்களுக்கு 10 கி.மீ தூரமும், 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ தூரமும், மாணவியர்களுக்கு 15 கி.மீ தூரமும், 17 வயதிற்குட்பட்டவர்கள் மாணவர்களுக்கு 20 கி.மீ தூரமும், மாணவியர்களுக்கும் 15 கி.மீ தூரமும் என மாணவ, மாணவியர்களுக்கு தனித்தனியாக நடைபெற்றது. இப்போட்டியில் சுமார் 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் வெற்றி பெறும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு முதல் பரிசு ரூ.5,000/-, இரண்டாம் பரிசு ரூ.3,000/-, மூன்றாம் பரிசு ரூ.2,000/- மற்றும் 4 முதல் 10 இடங்களுக்கு ரூ.250/- வீதம் பரிசுத்தொகை வழங்கப்படும். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் செ.பூபதி, மாவட்ட விளையாட்டு அலுவலர் எஸ்.கோகிலா, மாணவ, மாணவியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.