வெறிநாய் கடித்து கன்னுக்குட்டி பலி.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெறிநாய் கடித்து கன்னுக்குட்டி பலியானது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள டி.வெள்ளாளபட்டியில், சதீஸ்குமாரின் கன்று குட்டியை நேற்று( ஜன.5) நாய் ஒன்று கடித்து குதறியது. கன்றுக்குட்டியை மீட்டு சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி கன்றுக்குட்டி இன்று (ஜன.6) இறந்தது. சில நாட்களுக்கு முன்பு ஒரு முழு ஆட்டை இதே வெறி நாய் கடித்து தின்று விட்டது என்றும், குழந்தைகள் பெண்களை அந்த நாய் விரட்டி வருகின்றது என்றும் குற்றச்சாட்டு உள்ளது. இதற்கான நடவடிக்கையை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.