புதுக்கோட்டை கலெக்டர் அலுவலத்தில் இன்று நடைபெறும் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தை முன்னட்டு, பொதுமக்கள் அதிகளவில் வருகை தர உள்ளனர். இந்நிலையில் அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடாமல் இருப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் திருக்கோகர்ணம் காவல் நிலைய அதிகாரி மற்றும் காவலர்கள் பொதுமக்களை பரிசோதனை செய்த பிறகு மாவட்ட ஆட்சியர் அருணாவை சந்திக்க அனுமதிக்கின்றனர்.