நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் மருதூர் தெற்கு ஊராட்சி பூவதேவன்காடு பகுதியில், வாய்மேடு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் நேற்று ரூ.4.75 லட்சம் மதிப்பீட்டில், குறைந்த மின் அழுத்தத்தை போக்க புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு, வேதாரண்யம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் உதயம் முருகையன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், மின்சார வாரிய ஊழியர்கள், கிராம மக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.