மத்திய மாநில அரசுகளை கண்டித்து தேமுதிக சார்பில் திருச்செங்கோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம்
மத்திய மாநில அரசுகளை கண்டித்து தேமுதிக சார்பில் திருச்செங்கோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம்
தேமுதிக சார்பில் இன்று மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த கட்சியின் தலைமை கேட்டுக் கொண்டதற்கு இணங்க நாமக்கல் வடக்கு மாவட்ட தேமுதிக சார்பாக திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு ஆர்ப்பாட்ட ம் நடைபெற்றது. பெண்களுக்கும் மாணவிகளுக்கும் நடக்கும் பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், பெண்களுக்கு பாதுகாப்பை வலியுறுத்தியும், பொங்கலுக்கு பரிசுத்தொகுப்புடன் ரூபாய் ஆயிரம் வழங்கவும், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் விவசாயிகளுக்கும் நிவாரண தொகை வழங்கவும், போதை மற்றும் கஞ்சா இல்லாத தமிழகத்தை உருவாக்கவும், வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் வடக்கு மாவட்ட தேமுதிக செயலாளர் விஜய் சரவணன் தலைமைவகித்தார் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்களுக்கும் மாணவிகளுக்கும் நடக்கும் பாலியல் வன்கொடுமையை கண்டித்தும் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தியும் உங்களுக்கு ரூபாய் ஆயிரம் வழங்கவும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விவசாயிகளுக்கும் நிவாரணத் தொகை வழங்கவும் விசைத்தறியாளர்களுக் கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு வழங்க கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.