நாமக்கல் மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் தேர்வு – 27.12.2025 அன்று தேர்வு நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சியர் தகவல்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் தேர்வு – 2025 முன்னேற்பாட்டு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.;
நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் தேர்வானது 27.12.2025 அன்று 05 தேர்வு மையங்களில் 1110 தேர்வர்கள் தேர்வெழுத தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள் தேர்வு நாளன்று தேர்வு மையத்திற்கு காலை 8.30 முதல் 9.00 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர். தேர்வர்கள் காலை 9.00 மணிக்கு பிறகு தேர்வு மையத்தில் அனுமதிக்கப்படமாட்டார்கள்.மேலும் மதியம் 2.00 முதல் 2.30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர். தேர்வர்கள் மதியம் 2.30 மணிக்கு பிறகு தேர்வு மையத்தில் அனுமதிக்கப்படமாட்டார்கள். எனவே தேர்வர்கள் தங்களுக்கான தேர்வு மையத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு சென்று தேர்வுகளில் கலந்து கொள்ள வேண்டும். தேர்வர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். தேர்வர்கள் கருப்பு நிற பால்பாயிண்ட் பேனாவை பயன்படுத்தி மட்டும் தேர்வெழுதவும், நுழைவுச் சீட்டு (Hall Ticket) மற்றும் நுழைவுச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அசல் அடையாள அட்டை ஒன்றை தேர்வு நாளன்று கொண்டு வர வேண்டும்.தேர்வினை சிறப்பான முறையில் நடத்த அனைத்து துறை அலுவலர்களும் தங்களுக்கான பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். மேலும், தேர்வு மையங்களில் தேர்வர்கள் தங்களுக்கான தேர்வு அறைக்கு செல்ல வழிகாட்டி விவரங்களை சரியான முறையில் அறிவிப்பு பலகைகளில் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் ஆ.சு.எழிலரசி, மாவட்டக் கல்வி அலுவலர்கள், அரசு போக்குவரத்துக்கழகம், தீயணைப்புத்துறை, அஞ்சல் துறை உட்பட துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.