நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியரக ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில், ஜல் சக்தி அபியான் திட்டத்தின் மத்திய கண்காணிப்பு அலுவலர் கே.வி.அஜித் அவர்கள், தொழில்நுட்ப அலுவலர் பரமசிவம் (விஞ்ஞானி பி, நிலத்தடி நீர்வாரியம், சென்னை), மாவட்ட வன அலுவலர் மாதவி யாதவ், ஆகியோர் முன்னிலையில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.;

Update: 2025-12-22 12:40 GMT

நாமக்கல் மாவட்டத்தில் ஜல் சக்தி அபியான் JSA-CTR 2025 திட்டம் தொடர்பாக மத்திய கண்காணிப்பு அலுவலர் (Central Nodal officer)  கே.வி.அஜித் (Director, Naval Defence Systems, Department of Defence production) மற்றும் மத்திய தொழில் நுட்ப அலுவலர் (Technical officer) கே.பரமசிவம் விஞ்ஞானி, நிலத்தடி நீர் வாரியம், சென்னை ஆகியோர் நாமக்கல் மாவட்டத்தில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் பருவ மழைக்கு பிந்தைய காலத்தில் நீர் மேலாண்மை முன்னேற்றம் குறித்து சுற்றுபயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.அதனைத் தொடர்ந்து, நீர் மேலாண்மை தொடர்பான பிற துறை அலுவலர்களுக்கு இன்றைய தினம் மாவட்ட  ஆட்சியர்  தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் வனத்துறை, ஊரக வளர்ச்சி துறை, வேளாண்மை துறை, நீர்வளத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை, கல்வி துறை, கால்நடை பராமரிப்பு துறை சார்ந்த உயர் அலுவலர்கள், மாநகராட்சி/நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் பிற துறை அலுவலர்கள் கலந்து கொண்டு தங்களது துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள மற்றும் செயல்படுத்தப்படும் நீர் மேலாண்மை தொடர்பான பணிகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தனர்.தொடர்ந்து, மத்திய கண்காணிப்பு அலுவலர் கே.வி.அஜித் (Director, Naval Defence Systems, Department of Defence production) மற்றும் மத்திய தொழில் நுட்ப அலுவலர் கே.பரமசிவம் (விஞ்ஞானி, நிலத்தடி நீர் வாரியம், சென்னை) ஆகியோர் பரமத்தி வட்டாரம் கோலாரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.இக்கூட்டத்தில், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்)  கு.செல்வராசு உட்பட மாநகராட்சி, நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Similar News