பா.ஜ.க மேற்கு மாவட்ட தலைவர் மற்றும் பொதுசெயலாளருக்கு ஜாமின்
பழனியில் நேற்று கைது செய்யபட்ட பா.ஜ.க மேற்கு மாவட்ட தலைவர் மற்றும் பொதுசெயலாளர் இருவரையும் பழனி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஜாமினில் விடுவித்து உத்தரவு
பழனியில் கடந்த 3 ம் தேதி மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடந்த அநீதிக்கு எதிராக போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக மகளிர் அணி மாவட்ட தலைவி லீலாவதி தலைமையில் 15 பேர் ஒரு வேனில் புறப்பட்ட போது முன்னெச்சரிக்கையாக கைது செய்வதாக கூறி நகர காவல் ஆய்வாளர் மணிமாறன் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். அப்போது அங்கு வந்த பா.ஜ.க மாவட்ட தலைவர் கனகராஜ் செய்தியாளர் சந்திப்பின் போது 15 மகளிருக்கு 50 போலிசார் பாதுகாப்பில் தீவிரவாதிகள் போது அடைத்து வைக்கபட்டிருப்பதாக கூறி தனியார் மண்டபத்தின் அருகிலேயே தனியார் மதுபான பார் 24 மணி நேரமும் இயங்கி வருவதாக கூறி நேரடியாக காண்பித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தனியார் மதுபான கூடத்தில் அத்துமீறி நுழைந்ததாக 5 பிரிவுகளில் பா.ஜக மாவட்ட தலைவர் கனகராஜ் மீது வழக்கு பதிவு செய்யபட்ட நிலையில் நேற்று மாலை கைது திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கனகராஜ் மற்றும் மாவட்ட பொதுசெயலாளர் செந்தில்குமார் ஆகிய இருவரையும் கொடைக்கானல் சாலை செக்போஸ்டில் வைத்து கைது செய்யபட்டனர். கனகராஜ் கைது செய்யபட்ட சம்பவத்தை கண்டித்து நேற்று இரவு காவல் நிலையத்தில் குவிந்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டும் ,சாலை மறியல் போராட்டம் ,போலிசாருக்கும் பா.ஜகவினருக்கு கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதனை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது செய்யபட்டனர். கனகராஜ் ,செந்தில் குமார் இருவரையும் பழனி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யபட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த 43 நாட்களுக்கு முன் பழனி கோவில் தண்டாயுதபாணி விடுதியில் வழங்கபடும் வி.ஐ.பி முறைகேடாக விற்கபடுவதாக குற்றச்சாட்டியிருந்த வழக்கில் கனகராஜ் கைது செய்யபட்டதாகவும், மேலும் தனியார் மதுபான கூடத்தில் அத்துமீறி நுழைந்த்தாகவும் வழக்கு பதிவு செய்யபட்டதை போலிசார் கூறினர். கடந்த 43 நாட்களுக்கு முன் நடந்த கோவில் நிர்வாகத்தில் தற்போது தான் வழக்கு பதிவு செயயப்பட்டுள்ளதாகவும் , பழிவாங்கும் நடவடிக்கையில் காவல்துறை ஈடுபட்டு வருவதாகவும் பா.ஜ.க தரப்பில் எடுத்து கூறியதையடுத்து இருவரையும் பழனி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் ஜாமினில் விடுவித்து உத்தரவு பிறப்பித்தார்.