படாளம் அருகே பாலாற்று கரையோரத்தில் மாடு மேய்க்க சென்ற நபர் ஆற்றில் சடலமாக மீட்பு

படாளம் அருகே பாலாற்று கரையோரத்தில் மாடுமேக்கப் சென்ற நபர் ஆற்றில் சடலமாக மீட்பு

Update: 2025-01-04 06:19 GMT
படாளம் அருகே பாலாற்று கரை ஓரத்தில் மாடுமேக்கப் சென்ற நபர்ஆற்றில் சடலமாக மீட்பு செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த L.N.புரம் ஊராட்சிக்கு உட்பட்ட அரசன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை இவர் பாலாற்று ஆற்றங்கரை ஓரத்தில் மாடு மேய்ப்பது வழக்கம்.இந்த நிலையில் நேற்று வழக்கம்போல ஏழுமலை பாலாற்று ஆற்றங்கரை ஓரம் மாடு மேய்ப்பதற்காக சென்றுள்ளார் அவர் நேற்று இரவு வீடு திரும்பவில்லை ஆனால் அவர் வைத்திருந்த மாடுகள் மட்டும் வீடு திரும்பிய நிலையில் உறவினர்கள் அப்பகுதியில் சென்று தேடி உள்ளனர். இதை அடுத்து உறவினர்கள் படாளம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர் தகவலின் பேரில் படாளம் காவல்துறையினர் மற்றும் செங்கல்பட்டு தீயணைப்பு துறையினர் ஏழுமலையின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதை அடுத்து இன்று காலை பாலாற்று கரையில் மாடு மேய்க்கச் சென்ற ஏழுமலையின் உடல்நிலை தீயணைப்புத் துறையினர் சடலமாக மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து படாளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News