தென்காசியில் தேசிய நெடுஞ்சாலையில் மரம் நடும் விழா
தேசிய நெடுஞ்சாலையில் மரம் நடும் விழா நடைபெற்றது
தென்காசி மாவட்டம் தென்காசியில் இருந்து திருநெல்வேலி வரை நடைபெற்று வரும் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு தென்காசி ப்ராணா மரம் வளர்ப்பு இயக்க நிர்வாகிகள் தலைமையில் 12 நிழற்றும் மரங்கள் வைக்கப்பட்டன. மேலும் ஏற்கனவே வைக்கப்பட்ட மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான சமூக ஆர்வலர்களும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.