ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள்

கடத்தி வந்த பெண் கைது

Update: 2025-01-04 06:38 GMT
நாகை நகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட, கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று முன்தினம் இரவு நாகை நகர போலீசார் வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை நடத்தினர். சோதனையில், அந்த மோட்டார் சைக்கிளில் அரசால் தடை செய்யப்பட்ட ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. அதன் பேரில், அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் நாகையை சேர்ந்த பவிதா (35) என்பது தெரியவந்தது. அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, பவிதாவை கைது செய்து, அவரிடமிருந்த புகையிலை பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Similar News