குமரி மாவட்டம் கருங்கல் அருகே செல்லங்கோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் கப்பியறை என்ற இடத்த சேர்ந்த இரண்டு மாணவர்கள் 9-ம் வகுப்பில் படித்து வந்தனர். நேற்று காலையில் பள்ளி சென்ற மாணவர்கள் இருவரும் மாலையில் வீடு திரும்பவில்லை. பெற்றோர் பள்ளியில் சென்று விசாரித்த போது, இருவரும் நேற்று பள்ளிக்கு செல்லவில்லை என்ற தகவல் கிடைத்தது. உடனடியாக பெற்றோர் கருங்கல் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று 8-ம் தேதி காலை திடீரென மாணவர் ஒருவர் செல்போனில் தனது பெற்றோரை தொடர்பு கொண்டு. கோவை ரயில் நிலையத்தில் இருப்பதாக தெரிவித்தனர். உடனடியாக பெற்றோர் கருங்கல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். கருங்கல் போலீசார் உடனே கோவை ரயில்வே போலீசாரை தொடர்பு கொண்டனர். ரயில்வே போலீசார் 2 மாணவர்களையும் மீட்டனர். பின்னர் அவர்களை குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். வீட்டில் இருந்து பணத்தை எடுத்து சென்றதாகவும், பணம் தீர்ந்ததால் உடனடி வீட்டுக்கு தகவல் தெரிவித்ததாகவும் தெரிய வருகிறது. மாணவர்களை அழைத்து வர கருங்கல் போலீசார் இன்று கோவை சென்றனர்.