கன்னியாகுமரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எட்வர்ட் பிரைட் தலைமையிலான போலீசார் நேற்று கன்னியாகுமரி சுற்றுவட்டார பகுதியில் வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் அங்கு நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அந்த நபர் அசாம் மாநிலத்தை சேர்ந்த இம்ரே ரோன்கே (46) என்பது தெரிய வந்தது. மேலும் சோதனை செய்தபோது 74 கிராம் கஞ்சா வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். விசாரணையில் கஞ்சாவை அவர் விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். அதேபோல் கன்னியாகுமரி கலங்கரை விளக்கம் பகுதியில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த பகத்சிங் (30) என்பவரை போதை தரும் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனைக்கு வைத்திருந்ததாக போலீசார் கைது செய்தனர். இரண்டு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.