பஸ்சில் பர்ஸ் திருடிய 2 பெண்கள் கைது 

மார்த்தாண்டம்;

Update: 2025-03-15 06:14 GMT
பஸ்சில் பர்ஸ் திருடிய 2 பெண்கள் கைது 
  • whatsapp icon
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பாகோடு பகுதி வட்ட விளையை சேர்ந்தவர் தங்கராஜ் மனைவி கீதாதேவி. இவர் நேற்று தேவையான பொருட்கள் வாங்க பஸ்சில் மார்த்தாண்டம் சென்றார். அப்போது பஸ்சில் இருந்த இரண்டு பெண்கள் கீதா தேவியின் பர்சை திருடியுள்ளனர். இதை கண்ட சக பயணிகள் கூச்சலிட்டனர்.          உடனடியாக இரண்டு பெண்களையும் பிடித்து மார்த்தாண்டம் போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் பிடிபட் இருவரும் தூத்துக்குடி மாவட்டம் அண்ணா நகரை சேர்ந்த அஞ்சலி, பவானி என தெரிய வந்தது. போலீசாரிடம் பர்ஸ் திருடியதை ஒப்புக் கொண்டனர்.  இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து நேற்று மாலையில்  தக்கலை பெண்கள் சிறையில் அடைத்தனர்.

Similar News