நாகர்கோவிலில் லாட்டரி டிக்கெட்டுகள் விற்ற 2 பேர் கைது

ரூ 10 ஆயிரம் பறிமுதல்;

Update: 2025-03-15 11:58 GMT
நாகர்கோவில் கோட்டார் சப் இன்ஸ்பெக்டர் மகேந்த் தலைமையில் நேற்று வேப்ப மூடு சந்திப்பு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்ற திண்டுக்கல், நடுத்தெரு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (34) என்பவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் லாட்டரி டிக்கெட் பதுக்கி விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரை கைது செய்து 10 லாட்டரி டிக்கெட் பறிமுதல் செய்தனர.        மேலு வெங்கடேசன் நாகர்கோவிலில் உள்ள ஒரு தரியார்  நிறுவனத்தில் சீட்டு பணம் வசூலிக்கும் வேலை செய்து வருகிறார். தற்போது நாகர்கோவில் புன்னைநகர் பகுதியில் வசித்து வருகிறார். இவரிடம் இருந்து ரூபாய் பத்தாயிரம் பணத்தையும் போலீசார் பாரி முதல் செய்தனர்.         இதே போல் மீனாட்சி கார்டன் பகுதியில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்ததாக பறக்கின்கால் பகுதி சேர்ந்த சரவணன் (28) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 லாட்டரி டிக்கெட் பறிமுதல் செய்யப்பட்டன. கைதானவர்கள் ஜாவீனில் விடுவிக்கப்பட்டனர்.

Similar News