சேலம் செவ்வாய்பேட்டையில் சந்தேகப்படும் படியாக நின்ற நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், சேலம் செவ்வாய்பேட்டை குப்புசாமி தெருவை சேர்ந்த ஹரீஸ் (வயது 35) என்பதும், புகையிலை பொருட்கள் விற்றதும் தெரிய வந்தது. உடனே போலீசார் ஹரீசை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து ரூ.2 லட்சத்து 41 ஆயிரத்து 120 மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதேபோன்று கன்னங்குறிச்சி போலீசார், புகையிலை பொருட்கள் விற்றதாக அதே பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு (44) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து ரூ.11 ஆயிரத்து 500 மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.