சேலத்தில் திருட்டு வழக்குகளில் தலைமறைவாக இருந்த 2 பேர் கைது
போலீசார் நடவடிக்கை;

சேலம் அன்னதானப்பட்டி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த ஆண்டு புதிதாக கட்டி வரும் வீட்டில் மின்சார ஒயர் திருடிய வழக்கில் கைதான தாதகாப்பட்டி மூணாங்கரடு போயர் தெருவை சேர்ந்த சுண்ணாம்பு குணசேகரன் (வயது 22) என்பவர் தலைமறைவாக இருந்தார். இதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் கைதான அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (29) சிறையில் இருந்து வெளியே வந்து தலைமறைவானார். இந்த நிலையில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கண்ணையன் மற்றும் போலீசார் தாதகாப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தலைமறைவாக இருந்த குணசேகரன், மணிகண்டன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.