ராணிப்பேட்டை அருகே கார் சக்கரத்தில் சிக்கி 2 வாலிபர்கள் பலி

கார் சக்கரத்தில் சிக்கி 2பேர் பலி;

Update: 2025-03-24 04:56 GMT
ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியை சேர்ந்தவர்கள் நாகேந்திரன் (வயது 29), சேஷாசலம் (33) உள்பட 4 பேர் திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்வதற்காக 2 மோட்டார்சைக்கிள்களில் சித்தூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக நேற்று சென்று கொண்டிருந்தனர். நாகேந்திரன் மற்றும் சேஷாசலம் ஆகிய இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் மணியம்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, சென்னையில் இருந்து சித்தூர் நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி மோட்டார்சைக்கிள் மீது உரசியது.இதில் நாகேந்திரன் மற்றும் சேஷாசலம் ஆகிய இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது பின்னால் வந்த கார் அவர்கள் இருவர் மீதும் ஏறி இறங்கியது. இதில், இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் சிப்காட் போலீசார் விரைந்து சென்று நாகேந்திரன் மற்றும் சேஷாசலத்தின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களுடன் திருவண்ணாமலைக்கு சாமி தரிசனம் செய்ய சென்றவர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அவர்க ளது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.

Similar News