சாராயம் கடத்தி வந்த 2 பேர் கைது!
வேலூர் மாவட்டம் பரதராமி போலீசார் தமிழக - ஆந்திர எல்லையில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.;

வேலூர் மாவட்டம் பரதராமி போலீசார் தமிழக - ஆந்திர எல்லையில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த இரண்டு பேரை நிறுத்தி விசாரித்தனர்.அதில் சித்தூரைச் சேர்ந்த விஜயகுமார்(46), சுதாகர் (26) என்பது தெரிந்தது. மேலும் ஆந்திராவில் இருந்து சாராயம் கடத்தி வந்து பரதராமி பகுதியில் விற்றது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து, 3 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.