
கொல்லங்கோடு பகுதியில் பத்திரகாளி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. அப்போது அந்த பகுதியில் உள்ள வயல்வெளியில் சூதாட்டம் நடப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து கொல்லங்கோடு சப்-இன்ஸ்பெக்டர் சாமுவேல் மற்றும் போலீசார் அந்த பகுதியில் சோதனை செய்தனர். அப்போது ஒரு கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததை பார்த்தனர். போலீசாரை கண்டதும் அந்த பகுதியில் இருந்து அந்த கும்பல் தப்பி ஓடினர். இந்த நிலையில் சூதாட்டத்தை நடத்திக் கொண்டிருந்த சிலுவைபுரம் விஜின் ராஜ் (29), அவருக்கு உதவியாளராக இருந்த பிலாமூட்டு கடை சேர்ந்த சம்ரோஸ் (38) ஆகியோர் போலீசாரிடம் சிக்கினார். கொல்லங்கோடு போலீசார் 2 மீது வழக்கு பதிவு செய்து அவர்களிடமிருந்த ரூ.3,570-ஐ பறிமுதல் செய்தனர்.