குமரி : 2 பேருக்கு குண்டர் சட்டத்தில் சிறை

கொலை வழக்கு குற்றவாளிகள்;

Update: 2025-04-05 06:49 GMT
நாகர்கோவிலில் கடந்த மார்ச் மாதம்  கோட்டார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்தவரை  தீ வைத்து எரித்து கொலை செய்த வழக்கில் கீழராமன்புதூர், தட்டான் விளை பகுதியை சேர்ந்த தங்கராஜா என்பவரது மகன் சுதன் (26), மற்றும் தோவாளை திருமலைபுரம் பகுதியைச் சேர்ந்த ரவிராஜ் என்பவரது மகன் சுகுணேஷ் (26) ஆகிய இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.  இவ்விரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர்  அழகுமீனா  மேற்படி கொலை குற்றவாளிகள் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார்கள். உத்தரவின் படி கொலை குற்றவாளிகள் சுதன் மற்றும் சுகுணேஷ் இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Similar News