மீனவர்கள் 2வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை!
தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் 2வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை;
தூத்துக்குடி தென் தமிழக கடற் பகுதி குமரி கடல் பகுதி மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 35 கிலோமீட்டர் முதல் 55 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீச கூடும் என்பதால் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை தூத்துக்குடி மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஆயிரத்திற்கு மேற்பட்ட நாட்டு படகுகள் இரண்டாவது நாளாக கரையில் நிறுத்திவைப்பு மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு இந்திய வானிலை ஆய்வு மையம் ஏப்ரல் பத்தாம் பதினோராம் தேதி ஆகிய இரு தினங்கள் தமிழகத்தின் தென் கடலோர பகுதி குமரி கடல் பகுதி மன்னார்வளைகுடா கடல் பகுதி ஆகிய கடல் பகுதிகளில் சுமார் 55 கிலோமீட்டர் வேகத்தில் அவ்வப்போது காற்று வீசக்கூடும் மேலும் தொடர்ச்சியாக 35 கிலோமீட்டர் முதல் 45 கிலோமீட்டர் வரை காற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை சார்பில் தூத்துக்குடியில் மாவட்டத்தில் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் இன்றும் நாளையும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரியதாழை வரை சுமார் 500க்கும் மேற்பட்ட விசை படகுகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகு மற்றும் பைபர் படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் மீன்பிடி துறைமுகங்களில் இரண்டாவது நாளாக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன இதன் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் வருகிற ஏப்ரல் 15ஆம் தேதி முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் தூவங்குவதால் விசைப்படகுகள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக ஆள் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற தருவைக்குளம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான விசைப்படகுகள் கரை திரும்பி வருகின்றன