சேலத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

போலீசார் நடவடிக்கை;

Update: 2025-04-12 10:29 GMT
சேலம் வீராணம் அருகே மேட்டுக்காடு பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 33). ஆட்டையாம்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (30). இவர்கள் 2 பேரும் அழகாபுரம், ஆட்டையாம்பட்டி பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டனர். இது குறித்த புகாரின் பேரில் அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் துணை கமிஷனர்கள் சிவராமன், வேல்முருகன் ஆகியோர் போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து 2 பேரையும், குண்டர் சட்டத்தில் கைது செய்து போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு உத்தரவிட்டார். இதையடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகலை சேலம் சிறையில் உள்ள கார்த்திகேயன், மணிகண்டன் ஆகியோரிடம் போலீசார் வழங்கினர்.

Similar News