திருச்சியில் அடையாளம் தெரியாத 2 பேர் சாவு

இறந்த நபர்கள் யார் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது குறித்து தீவிர விசாரணை;

Update: 2025-04-14 13:15 GMT
திருச்சி பெரிய கடை வீதி பகுதியில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கி கிடப்பதாக ஏப்.11 ந்தேதி கோட்டை போலீசாருக்கு தகவல் வந்தது .தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் . இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதே போன்று திருச்சி ராமகிருஷ்ணா பாலம் அருகே நேற்று மாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்பொழுது 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் பாலம் அருகே மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்ட போலீசார் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி அளித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை. இறந்த நபர்கள் யார் எந்த ஊரை சேர்ந்தவர்கள்என்பது குறித்துதீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News