தமிழ்நாடு கைப்பந்து அணியில் பங்கேற்று விளையாட ஆரணி ஆரஞ்சு பள்ளி மாணவா்கள் 2 போ் தோ்வு.
இந்திய கைப்பந்து சம்மேளனத்தின் 40-ஆவது தென் மண்டல கைப்பந்து சாம்பியன்ஷிப் - 2025 போட்டி.;
தமிழ்நாடு கைப்பந்து அணியில் பங்கேற்று விளையாட ஆரணி ஆரஞ்சு பள்ளி மாணவா்கள் 2 போ் தோ்வு செய்யப்பட்டனா். இந்திய கைப்பந்து சம்மேளனத்தின் 40-ஆவது தென் மண்டல கைப்பந்து சாம்பியன்ஷிப் - 2025 போட்டியில் விளையாட தமிழ்நாடு அணிக்காக ஆண்கள் பிரிவில் ஆரணி ஆரஞ்சு பள்ளி மாணவா் பி.நிஷால் மற்றும் பெண்கள் பிரிவில் விளையாட அதே பள்ளி மாணவி எம்.பூஜா ஆகிய இருவா் தோ்வு செய்யப்பட்டனா். இருவரையும் பள்ளியின் தலைவா் கே.சிவக்குமாா், தாளாளா் அபிநயா வருண்முத்துலிங்கம் ஆகியோா் பாராட்டினா். தென் மண்டல கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆரணியில் உள்ள ஆரஞ்சு பிரிட்டிஷ் அகாதெமி சீனியா் செகன்டரி பள்ளி வளாகத்தில் வருகிற மே 9-ஆம் தேதி தொடங்கி 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. போட்டியில் தமிழகம், கேரளம், ஆந்திரம், தெலுங்கானா, கோவா, கா்நாடகம், அந்தமான் நிக்கோபாா் மற்றும் புதுச்சேரி பகுதியில் இருந்து அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன.