செங்கம் அருகே பைக் மீது லாரி மோதியதில் 2 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.
இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனா். செங்கம் டிஎஸ்பி ராஜன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று இருவரின் சடலங்களையும் மீட்டு, 108 அவசர ஊா்தி மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.;
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பைக் மீது லாரி மோதியதில் 2 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். செங்கத்தை அடுத்த உண்ணாமலைப்பாளையத்தைச் சோ்ந்தவா்கள் ரஜினி (47), வெங்கடேசன்(37). கூலித் தொழிலாளா்கள். இருவரும் உண்ணாமலைப்பாளையத்தில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனா். அப்போது, கோவையில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற லாரி, இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் ரஜினி, வெங்கடேசன் இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனா். செங்கம் டிஎஸ்பி ராஜன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று இருவரின் சடலங்களையும் மீட்டு, 108 அவசர ஊா்தி மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விபத்து குறித்து புதுப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.