சாலை விபத்தில் 2 பேர் பலி
ஒட்டன்சத்திரம் அருகே சாலை விபத்தில் 2 பேர் பலி;
ஒட்டன்சத்திரம் கொல்லப்பட்டி புறவழிச்சாலையைக் கடக்க முயன்ற திருச்சியைச் சேர்ந்த முதியவர் முகமது ஹவுஸ் (வயது 80) அவ்வழியே சென்றலாரி மோதியதில் சம்பவ இடத்திலே பலியானார். அதேபோல் ஒட்டன்சத்திரம்-வேடசந்தூர் சாலை கொல்லப்பட்டி பைபாஸ் அருகே லாரியின் பின்புறம் இருசக்கர வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற ரெட்டியார்சத்திரம் அடுத்த எஸ்.வாடிப்பட்டியை சேர்ந்த மணிகண்டன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னால் அமர்ந்து சென்ற வேடசந்தூர் நல்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த மற்றொரு மணிகண்டன் பலத்த காயம் ஏற்பட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த இரு சம்பவங்கள் குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.