கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த 2 பேர் கைது

சிறுமலையில் கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த 2 பேர் கைது,38 மதுபான பாட்டில்கள் பறிமுதல்;

Update: 2025-05-25 04:27 GMT
திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் பாலசுப்ரமணியன் மற்றும் காவலர்கள் சிறுமலை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சிறுமலைபுதூர் பகுதியில் அரசு அனுமதியின்றி கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த சிறுமலை புதூர் பகுதியை சேர்ந்த தெய்வேந்திரன் மகன் கோபிநாத்(32), முத்துமாயதேவர் அவர் மகன் தேவேந்திரன்(60) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 38 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய ஒருவரை தாலுகா காவல் நிலைய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Similar News