கரூர் அருகே மணல் கடத்தி பதுக்கி வைத்திருந்த இருவர் கைது. கடத்தலுக்கு பயன்படுத்திய 2- லாரிகள்
கரூர் அருகே மணல் கடத்தி பதுக்கி வைத்திருந்த இருவர் கைது. கடத்தலுக்கு பயன்படுத்திய 2- லாரிகள்;
கரூர் அருகே மணல் கடத்தி பதுக்கி வைத்திருந்த இருவர் கைது. கடத்தலுக்கு பயன்படுத்திய 2- லாரிகள் & கார் பறிமுதல். கரூர் அடுத்த ஏமூர் புதூரில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் சட்ட விரோதமாக ஆற்று மணலை கடத்தி விற்பனை செய்வதாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று மே 30-ல் கரூர் மாவட்ட தனிப்படை உதவி ஆய்வாளர் சையது அலி தலைமையில் தனிப்படையினர் ஏமூர் புதூரில் உள்ள பழனிச்சாமி என்பவருக்கு சொந்தமான இடத்தை சோதனை செய்த போது அங்கு சுமார் 35 யூனிட் ஆற்று மணல் கொட்டி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மணல் கடத்தலில் ஈடுபட்ட கோவை மாவட்டம் சூலூர் சேர்ந்த லாரி உரிமையாளர் சதாசிவம் வயது 38 கரூர் நத்தமேடு பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் சூர்யா வயது 34 ஆகியோரை பிடித்து விசாரணை செய்ததில் சதாசிவம் என்பவர் மேற்படி பழனிச்சாமயின் இடத்தை வாடகைக்கு பிடித்து சட்ட விரோதமாக ஆற்று மணலை கடத்தி விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்துள்ளதாக தெரிவித்தன் பேரில் இருவரையும் கைது செய்து , அவர்களிடமிருந்து சுமார் 35 யூனிட் ஆற்று மணலையும் , கடத்தலுக்கு பயன்படுத்திய 2 லாரிகள் மற்றும் Toyota Etios - என்ற காரையும் கைப்பற்றி வெள்ளியனை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். இதில் சதாசிவம் என்பவர் மீது ஏற்கனவே கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி மற்றும் சின்னதாரபுரம் காவல் நிலையங்களில் மணல் கடத்தலில் ஈடுபட்டது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது. மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்த காவல்துறையினரை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா பாராட்டு தெரிவித்தார்.