குமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்தவர் அன்சார் (43). கூலி தொழிலாளி. இவர் தனது வீட்டின் அருகே 48 புறாக்களை வளர்த்து வருகிறார். சம்பவ தினம் புறாக்களை கூட்டில் அடைத்து வைத்து விட்டு சென்றுள்ளார். மறுநாள் வந்து பார்த்தபோது கூண்டு திறந்து 48 புறாக்களையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. அவற்றின் மதிப்பு ரூ. 48 ஆயிரம் ஆகும். இது குறித்து அன்சார் களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து புறாக்களை திருடிய நபர்களை தேடிவந்தனர். விசாரணையில் புறாக்களை திருடியது இரவிபுக்தன் துறை சேர்ந்த ஜெகதீஷ் (21) தூத்தூர் பகுதி சிம்சன் (28) என்பது தெரிய வந்தது. போலீசார் ஜெகதீஷ் சிம்சன் இருவரின் கைது செய்ததுடன் 48 புறாக்களையும் பறிமுதல் செய்தனர்.