வேலகவுண்டம்பட்டி அருகே கோவில்களில் திருடிய 2 பேர் கைது.

வேலகவுண்டம்பட்டி அருகே கோவில்களில் திருடிய 2 பேர் கைது கிளை சிறையில் அடைத்தனர்.;

Update: 2025-07-06 12:04 GMT
பரமத்தி வேலூர், ஜூலை.6: நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே தொட்டிபட்டி குறுக்குபுரம் பகுதியில் வீரமாத்தி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அதிகாலை சுமார் 4 மணி அளவில் கோவிலில் பூட்டை உடைப்பது போன்ற சத்தம் கேட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சென்று பார்த்தபோது வீரமாத்தி அம்மன் கோவில் பூட்டை ஒருவர் வேல் கம்பி மூலம் உடைத்து உள்ளே சென்று கோவிலுக்குள் இருந்த பித்தளை மணி, திருநீருத்தட்டு மற்றும் அங்கிருந்த பொருட்களை எடுத்து வந்துள்ளார். அருகில் இருந்த மற்றொரு வீரமாத்தி அம்மன் கோவில் பூட்டை மற்றொருவர் இரும்பு மூலம் உடைத்துக்கொண்டிருந்தார். அதை பார்த்த பொதுமக்கள் சத்தம் போட்டுள்ளனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் பிடித்து அவர்களிடமிருந்து பித்தளை மணி, திருநீர்த்தட்டு மற்றும் பல்வேறு பொருட்களையும் கைப்பற்றினர். பின்னர் உடனடியாக அவர்கள் இருவரையும் பிடித்து வேலகவுண்டம்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து மாவுரெட்டிபட்டி அருகே புள்ளாச்சிபட்டி பகுதியை சேர்ந்த கோபால் (44) என்பவர் வேலகவுண்டம்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ்சப்-இன்ஸ்பெக்டர் கைலேஷ்வரன் கோவில் பூட்டை உடைத்து திருடியதாக 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் 2 பேரும் வேலகவுண்டம்பட்டி அருகே சின்னமணலி குலாலர் தெருவை சேர்ந்த சுந்தரம் மகன், கோவில் சிற்ப வேலை செய்யும் தொழிலாளி கௌதம் (27). சின்ன மணலி குடி தெரு சேர்வ ராயன்பட்டி பகுதியை சேர்ந்த ஜே.சி.பி. ஆப்ரேட்டர் மாதேஸ்வரன் (34) என்பது தெரியவந்தது. பின்னர் 2 பேரையும் நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிபதியின் உத்தரவின் பேரில் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.

Similar News