சங்கரன்கோவில் நீதிமன்றம் முன்பு 2 குழந்தைகளுடன் வாலிபர் தீக்குளிக்க முயற்சி

நீதிமன்றம் முன்பு 2 குழந்தைகளுடன் வாலிபர் தீக்குளிக்க முயற்சி;

Update: 2025-07-08 01:38 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காந்தி நகர் 5ஆம் தெருவை சேர்ந்த புகழேந்தி என்பவர் இவர் மனைவி கடந்த மாதம் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த அருகில் வசித்து வரும் காவலர் என்பவர் புகழேந்தி மனைவி குளித்ததை பார்த்ததாக சங்கரன்கோவில் டவுன் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காவலர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிந்து இன்று மாலை 5 மணி அளவில் சங்கரன்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு இரண்டு குழந்தைகளுடன் புகழேந்தி தீக்குளிக்க முயற்சி செய்ததால் அங்கு நின்றிருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தினார். உடனே அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News