கிருஷ்ணகிரி ஒசூா் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் ஜூஜூவாடியில் டூவீலரில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனையிட்டதில் டூவீலரில் ஒரு கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது விசாரணையில் அவா்கள் சென்னை கோயம்பேடு பகுதியைச் சோ்ந்த சந்தோஷ்குமார்(20), மற்றும் செய்யாறு பகுதியைச் சோ்ந்த சரவணன் (24) ஆகிய 2 பேர் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதை அடுத்து 2 பேரை போலீசார் கைது செய்து அவா்களிடமிருந்து 14 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா மற்றும் டூவீலரை பறிமுதல் செய்தனா்.