தளி அருகே வடமாநில தொழிலாளிகள் மீது தாக்கிய 2 பேர் மீது வழக்கு
தளி அருகே வடமாநில தொழிலாளிகள் மீது தாக்கிய 2 பேர் மீது வழக்கு;
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சூரஜ் சேத்தி (24). இவர் தளி அருகேயுள்ள உப்பாரப்பள்ளியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இவர் தனது நண்பர் சவுரவ் தீப் (22) என்பவரும் வேலை முடிந்து நடந்து சென் றபோது டூவீலர் வந்த இரண்டு பேர் சூரஜ், சவு ரவ் தீப் ஆகியோரிடம் சிகரெட் கேட்டு தகராறு செய்துள்ளனர். இதில் ஆத்திரமடைந்த அந்த நபர்கள், இரண்டு பேரை தாக்கி விட்டு சென்று விட்டனர். இது குறித்து சூரஜ் அளித்த புகாரின் பேரில் தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறன்றனர்.