நிதி ஆயோக் அமைப்பால் விருதுநகர் மாவட்டத்திற்கு 2 தங்க பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளதை அமைச்சரிடம் காண்பித்து வாழ்த்து பெற்ற ஆட்சியர்
நிதி ஆயோக் அமைப்பால் விருதுநகர் மாவட்டத்திற்கு 2 தங்க பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் அமைச்சரிடம் காட்டி வாழ்த்து பெற்றார்;
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புது தில்லி, நிதி ஆயோக் அமைப்பால் நடத்தப்பட்ட முழுநிறைவு திட்ட இயக்கத்தில் முன்னேற விழையும் மாவட்டம் மற்றும் முன்னேற விழையும் வட்டாரம் திட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்ட 6 குறியீடுகளை 100 சதவீதம் நிறைவு செய்தமைக்காக இந்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பால் விருதுநகர் மாவட்டத்திற்கு 2 தங்க பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளதை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் மற்றும் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோரிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா காண்பித்து வாழ்த்து பெற்றார்.