பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் மது குடித்துகொண்டிருந்த 2 பேர் கைது

குமாரபாளையம் அருகே பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் மது குடித்துகொண்டிருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2025-08-16 14:09 GMT
குமாரபாளையம் விட்டலபுரி கோயில் அருகில், மற்றும் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் மது குடித்துகொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேரில் சென்ற இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. நடராஜன் உள்ளிட்ட போலீசார், பிரபு, 38, வேல், 47, ஆகியோர் பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் மது குடித்துகொண்டிருந்ததால், 2 நபர்களையும் கைது செய்தனர்.

Similar News