காவிரி ஆற்றில் மூழ்கிய வாலிபரை 2-வது நாளாக தேடும் பணி தீவிரம்.
ஜேடர்பாளையம் காவிரி ஆற்று தண்ணீரில் மூழ்கிய வாலிபரை 2-வது நாளாக தேடும் பணி தீவிரம்.;
பரமத்திவேலூர்,அக்.3: மாவட்டம் நாமக்கல் புதுச்சத்திரம் அய்யம்புதூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் விஜய் (25). இவரும் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் கவியரசன் (25) உட்பட பேர் கவியரசனின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் பரிசல் துறை காவிரி ஆற்றுக்கு நேற்று வந்து அங்கு பிறந்தநாள் விழா கொண்டாடிவிட்டு 6 பேரும் காவிரி ஆற்று பரிசல் துறை பகுதியில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது விஜய் காவிரியாற்றில் ஆழமான பகுதிக்கு சென்று குளித்து கொண்டிருந்தார். திடீரென கவியரசன் மற்றும் 4 பேரும் பார்த்தபோது தண்ணீரில் குளித்து கொண்டிருந்த விஜய்யை காணவில்லை. அவர்கள் தண்ணீருக்குள் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து கவியரசன் ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த ஜேடர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்து உடனடியாக நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் அங்குள்ள மீனவர்கள் பரிசல் மற்றும் ரப்பர் டியூப் மூலம் நேற்று இரவு வரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரமானதால் விஜய்யை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் சனிக்கிழமை காலை 8 மணி முதல் 2-வது நாளாக தீயணைப்பு துறையினர் மற்றும் மீனவர்கள் காவிரி ஆற்றின் கரையின் இருகரை பகுதிகளிலும் தொடர்ந்து தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் காவிரி ஆற்றில் குளித்து கொண்டிருந்த வாலிபர் திடீரென காவிரி ஆற்றில் மூழ்கியதால் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள். உறவினர்கள் ஜேடர்பாளையம் பரிசல் துறை காவிரி ஆற்று பகுதியில் கதறி அழுதனர்.