கஞ்சா விற்பனை செய்த 2 கேரளா வாலிபர்கள் கைது
கொடைக்கானலில் கஞ்சா விற்பனை செய்த 2 கேரளா வாலிபர்கள் கைது;
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், மன்னவனூர் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்த கேரளா மாநிலம் கோழிக்கோடு-வை சேர்ந்த பாலன் மகன் பிபின்(29), ஆலப்புழாவை சேர்ந்த கங்கல்குஞ்சு மகன் மாகின்(29) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 350 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.