பழனியில் மசாஜ் என்ற பெயரில் பாலியல் தொழில் – 2 பேர் கைது, 3 பெண்கள் மீட்பு
Dindigul;
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மசாஜ் சென்டரில் அழகிகளை வைத்து பாலியல் தொழில் செய்வதாக பழனி DSP.தனஞ்ஜெயன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அடிவாரம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜா சார்பு ஆய்வாளர் பிரதாப் மற்றும் காவலர்கள் அடிவாரம் இடும்பன் கோவில் ரோடு பகுதியில் செயல்பட்டு வந்த மசாஜ் சென்டரில் திடீர் சோதனை மேற்கொண்டனர் அப்போது அழகிகளை வைத்து பாலியல் தொழில் செய்வது தெரிய வந்தது இதனையடுத்து போலீசார் பழனி லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயபாண்டியன் மகன் சுந்தர்(51), தொப்பம்பட்டி, சின்னவேலம்பட்டியை சேர்ந்த முருகன் மகன் சாமிக்கண்ணு(39) ஆகிய 2 பேரை கைது செய்து மசாஜ் சென்டரில் தங்க வைக்கப்பட்டிருந்த 3 பெண்களையும், மீட்டு, அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்