திண்டுக்கல்லில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது - 250 கிராம் கஞ்சா பறிமுதல்
Dindigul;
திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி உத்தரவின் பேரில் சார்பு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது நத்தம்ரோடு, விஜய் தியேட்டர் எதிரே பையில் மறைத்து வைத்து கஞ்சா விற்பனை செய்த திண்டுக்கல், கிழக்கு ஆரோக்கியமாதா தெரு பகுதியை சேர்ந்த ஜோசப் மகன் ஜோஸ்வா ஜான் ரோஸ்(25) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்