சிறுமிக்கு பாலியல் தொல்லை: தாய் உள்பட 2 பேருக்கு 7 ஆண்டு சிறை
சேலம் கோர்ட்டு தீர்ப்பு;
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையை சேர்ந்தவர் டினோஸ் ரூபன் (வயது 35). இவருக்கும் சேலம் குகை பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி பழகி வந்தனர். இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு டினோஸ் ரூபன் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று உள்ளார். பின்னர் 2 பேரும் ஒன்றாக இருந்து உள்ளனர். இதை அந்த பெண்ணின் 16 வயது மகளான சிறுமி பார்த்து உள்ளாள். இதையடுத்து 2 பேரிடமும் சிறுமி சத்தம் போட்டு உள்ளாள். அப்போது டினோஸ் ரூபன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இது குறித்த புகாரின் பேரில் சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டினோஸ் ரூபன் மற்றும் சம்பந்தப்பட்ட பெண் ஆகிய 2 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட, டினோஸ் ரூபன் மற்றும் சம்பந்தப்பட்ட பெண் ஆகிய 2 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு கூறினார்.