கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற 2 பெண்களிடம் 8 சவரன் பறிப்பு
திருத்தணியில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற 2 பெண்களிடம் 8 சவரன் பறிப்பு;
திருத்தணியில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற 2 பெண்களிடம் 8 சவரன் பறிப்பு. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி காந்திநகரில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பக்தர் கூட்டத்தில் நின்றிருந்த காந்தி ரோடு சேர்ந்த லோகநாதன் என்பவர் மனைவி ஜோதி என்பவர் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்க செயின், மின்வாரிய அலுவலர்கள் குடியிருப்பை சேர்ந்த வேலாயுதம் என்பவர் மனைவி உமா அணிந்திருந்த மூன்று சவரன் நகை உட்பட 8 சவரன் கூட்டத்தை பயன்படுத்தி நூதன முறையில் மர்ம நபர்கள் பறித்து சென்றதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். கும்பாபிஷேகம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பெண்களிடம் நகைகள் பறித்த சம்பவம் பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.திருத்தணி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.