இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி 20க்கும் மேற்பட்ட திருநங்கைகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு*
இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி 20க்கும் மேற்பட்ட திருநங்கைகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
காரியாபட்டியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி 20க்கும் மேற்பட்ட திருநங்கைகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பகுதிகளில் சுமார் 40-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இவர்கள் அன்றாடம் டோல்கேட், பேருந்து நிலையம் போன்ற பகுதிகளில் யாசகம் தேடி பிழைப்பு நடத்தி வருகின்றனர், மேலும் இவர்கள் ராஜா ராணி ஆட்டம், ஒப்பாரி பாடல்கள் பாடி அன்றாட பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்கள் அனைவரும் தற்போது காரியாபட்டியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். கடந்த எட்டு ஆண்டுகளாக காரியாபட்டி தாசில்தார் மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் தமிழ்நாடு அரசின் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு தொடர்ந்து மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்ல எனவும், மேலும் சக மனிதர்களைப் போல் வாழ்வதற்கும், வாழ்வாதாரத்தில் தங்களை மேம்படுத்திக் கொள்ளவும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி இன்று 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் காரியாபட்டி தாலுகா அலுவலகம் முன்புறமுள்ள மதுரை -தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கு விரைந்து வந்த காரியாபட்டி காவல்துறையினர் திருநங்கைகள் கையில் வைத்திருந்த பெட்ரோல் கேனை பிடுங்கி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் காரியாபட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சார்பு ஆய்வாளர் அசோக்குமார் தலைமையிலான போலீசார் மற்றும் தாசில்தார் மாரீஸ்வரன் தலைமையிலான வருவாய்த் துறையினர் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இன்னும் ஒரு வார காலத்தில் உங்களுக்காக புறம் போக்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு இடம் வழங்கப்படும் என உறுதியளித்தை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். கடந்த ஆண்டும் இதே போல் திருநங்கைகள் இதே இடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. ஒரு வருட காலமாகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த திருநங்கைகள் இன்று பெட்ரோல் கேனுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.