அரசு அங்காடியில் 20 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை
தர்மபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் 20 லட்சத்திற்கு வெண்பட்டுக்கூடுகள் விற்பனை;
தர்மபுரி பட்டு வளர்ச்சி துறை சார்பில் பட்டுக்கூடு ஏல அங்காடி, தர்மபுரி நான்கு ரோடு அருகே செயல்பட்டு வருகிறது. இந்த அங்காடிக்கு தினசரி தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, மாரண்டஹள்ளி பகுதிகளில் இருந்தும், சேலம்,கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ஈரோடு உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும் தினசரி விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம். நேற்று 53 விவசாயிகள் 3,994 கிலோ வெண்பட்டுக்கூடுகளை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். பட்டுக்கூடுகள் அதிகபட்சமாக ஒரு கிலோ 612 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக கிலோ 291 ரூபாய்க்கும் , சராசரியாக கிலோ 492ரூபாய்க்கும் என 20,02,546 ரூபாய்க்கு ஏலம் நடைபெற்றதாக பட்டுக்கூடு நல அலுவலர் தெரிவித்துள்ளார்.