குழாய் உடைந்து 20 அடி உயரத்திற்கு வெளியேறிய குடிநீர்

குடிநீர் குழாய் உடைப்பிற்கான காரணத்தை கண்டறிந்து, சரி செய்யும் பணியில் குடிநீர் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்;

Update: 2025-04-22 08:33 GMT
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே, ஸ்ரீபெரும்புதுார், பிள்ளைப்பாக்கம், இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம், வல்லம் -வடகால் உள்ளிட்ட ஐந்து சிப்காட் தொழில் பூங்காகளில், 1,000க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்குள்ள தொழிற்சாலைகளுக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, ராட்சத குழாய் வழியே குடிநீர் தினமும் வினியோகிக்கப்படுகிறது. இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதுார் - சிங்கபெருமாள் கோவில் சாலையோரம், ஒரகடம் மற்றும் வல்லம் வடகால் தொழிற்பூங்காகளுக்கு செல்லும் குடிநீர் குழாய், நேற்று மதியம் திடீரென உடைந்து தண்ணீர் வானை நோக்கி பீரியது. 20 அடி உயரத்திற்கு, ஒரு மணி நேரத்திற்கு மேலாக குடிநீர் வெளியேறியதால், பல ஆயிரம் லிட்டர் குடிநீர் சாலையோரம் கரைப்புறண்டு ஓடியது. இது குறித்த தகவலின்படி வந்த சிப்காட் அதிகாரிகள், ராட்சத மின் மோட்டாரை ஆஃப் செய்து, குடிநீர் வெளியேறுவதை நிறுத்தினர். தொடர்ந்து, குடிநீர் குழாய் உடைப்பிற்கான காரணத்தை கண்டறிந்து, சரி செய்யும் பணியில் குடிநீர் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News