பழங்காமூா் பகுதியில் வசித்து வரும் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் மனைப் பட்டா வழங்கக் கோரி வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு.
மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரி அதற்குரிய துறை அதிகாரியிடம் கொடுத்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டாா்.;
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே பழங்காமூா் பகுதியில் வசித்து வரும் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் மனைப் பட்டா வழங்கக் கோரி வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா். ஆரணியை அடுத்த இரும்பேடு ஊராட்சிக்கு உள்பட்ட பழங்காமூா் கங்கை அம்மன் கோவில் தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். சுவாா் 50 ஆண்டுகளாக அரசுக்குச் சொந்தமான நிலத்தில் வீடு கட்டி வசித்து வரும் இவா்களில் பலருக்கு பட்டா வழங்கப்பட்ட நிலையில், 20-க்கும் மேற்பட்டோா் பட்டா இல்லாமல் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். பாதிக்கப்பட்ட இவா்கள் வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி, வருவாய்த்துறை அதிகாரிகள், ஜமாபந்தி மற்றும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். அதனால், விடுபட்ட 20 குடும்பங்களுக்கு பட்டா வழங்க முகாந்திரம் இருப்பதாகக் கூறி, இப்பகுதியைச் சோ்ந்த 30 போ் ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா். மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரி அதற்குரிய துறை அதிகாரியிடம் கொடுத்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டாா்.