அம்மா உணவகத்தில் தயிர் சாதம், சாம்பார் சாதம் ரூ. 20 ரூபாய்க்கு விற்கும் ஊழியர்கள்- வாடிக்கையாளர் வாக்குவாதம்...*
அம்மா உணவகத்தில் தயிர் சாதம், சாம்பார் சாதம் ரூ. 20 ரூபாய்க்கு விற்கும் ஊழியர்கள்- வாடிக்கையாளர் வாக்குவாதம்...*;
விருதுநகரில் உள்ள அம்மா உணவகத்தில் தயிர் சாதம், சாம்பார் சாதம் ரூ. 20 ரூபாய்க்கு விற்கும் ஊழியர்கள்- வாடிக்கையாளர் வாக்குவாதம்... தமிழகத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் மலிவு விலையில் அம்மா உணவகத்தை கடந்த 2013 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் திட்டம் தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது உள்ள திமுக ஆட்சியில் இந்த அம்மா உணவகத்தில் உணவு தரமானதாக இல்லை என்று ஏழை, நடுத்தரமக்களின் பயன்பாடும் குறைந்து வரும் நிலையில் விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் முன்பு மலிவு விலையில் அதாவது தயிர் சாதம் மூன்று ரூபாய்க்கும், சாம்பார் சாதம் ஐந்து ரூபாய்க்கும் வழங்கப்பட்டு வந்தன. தற்போது இந்த அம்மா உணவகத்தில் இந்த உணவு இருபது ரூபாய்க்கு தரப்படுகின்றது. மேலும் விலைப்பட்டியலும் இல்லாத நிலையில் அங்கிருக்கும் ஊழியர்கள் கேட்கும் தொகையினை நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் வாங்கி உணவருந்தும் அவலநிலை உள்ளது. இன்று உணவருந்த வந்த வாடிக்கையாளர் ஒருவர் தமிழக அரசு நிர்ணயித்த விலையை விட அதிகமாக அதாவது 20 ரூபாய்க்கு ஏன் விற்கிறீர்கள் என்று ஊழியர்களிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது எனவே நகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு இந்த அம்மா உணவகத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் உணவருந்தும் வகையில் சரியான விலைப் பட்டியலை வைத்து உணவினை வழங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது