வாணியம்பாடி அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை 14 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளை அடித்த வழக்கில் பக்கத்து வீட்டு மூதாட்டி கைது

வாணியம்பாடி அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை 14 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளை அடித்த வழக்கில் பக்கத்து வீட்டு மூதாட்டி கைது;

Update: 2025-05-20 04:22 GMT
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை 14 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளை அடித்த வழக்கில் பக்கத்து வீட்டு மூதாட்டி கைது வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் நடவடிக்கை* திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் முனிசாமி டைலர் தொழில் செய்து வரும் இவர், கடந்த 16 ஆம் தேதி குடும்பத்துடன் வெளியில் சென்றுள்ளார், இதை நோட்டமிட்ட மர்ம நபர் முனிசாமியின் வீட்டின் பின்புறம் பக்க கதவை உடைத்து உள்ளே சென்று, உள் அறையில் இருந்த பீரோவை உடைத்து பீரோவில் வைத்திருந்த 20 சவரன் தங்க நகை 14 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி சென்றுள்ளார் பின்னர் வீடுதிரும்பிய முனிசாமி வீட்டின் பீரோ உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த 20 சவரன் தங்கநகை மற்றும் 14 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது, உடனடியாக முனுசாமி இதுகுறித்து வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் கைரேகை நிபுணர்களை வரவழைத்து கைரேகை சேகரித்து, இக்கொள்ளைச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், முனிசாமியின் வீட்டின் அருகே வசிக்கும் கீதா என்ற பெண் முனிசாமி குடும்பத்தினருடன் வெளியே சென்றிருப்பதை அறிந்து, முனிசாமியின் வீட்டின் பின்பக்க கதவை இரும்பு கம்பியால் உடைத்து, 20 சவரன் தங்கநகை மற்றும் 14 ரூபாய் பணத்தை கொள்ளையடித்ததும், கொள்ளையடிக்கப்பட்ட தங்கநகையை வாணியம்பாடியில் உள்ள அடகுகடையில் விற்பனை செய்ததும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது, உடனடியாக கீதாவை வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் கைது செய்து அவர்மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.. மேலும் பக்கத்து வீட்டில் வெளியே சென்றிருப்பதை அறிந்து, அவரது வீட்டில் நுழைந்து பெண் தங்கநகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

Similar News