கிராம நிர்வாக அலுவலகத்தின் முன் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டம்

கிராம நிர்வாக அலுவலகம் முன் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு;

Update: 2025-03-01 14:34 GMT
கரடி புத்தூர் கிராமத்தில் பொதுமக்கள் போராடிவரும் நிலையில் மறுபுறம் போலீஸ் பாதுகாப்புடன் குவாரியில் மணல் அள்ளும் பணிகள் தொடங்கியுள்ளது கிராம நிர்வாக அலுவலகம் முன் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு சென்னை உள் வட்ட சுற்றுச்சாலை திட்டப் பணிக்காக கும்மிடிப்பூண்டி அடுத்த கரடிப்புத்தூர் கிராமத்தில் குமார் 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட கல்லாங்குத்து நிலத்தில் குவாரி அமைக்க மாவட்ட அறிமுகவளத்துறை அதிகாரிகள் அனுமதி வழங்கினார்கள். ஆனால் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அதே இடத்தில் குடிமனை பட்டா வழங்க வேண்டும் என குவாரி நடத்த எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்களை அகதிகளாக அறிவிக்க வலியுறுத்தி ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை ஆகிவற்றை கிராம நிர்வாக அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்களின் போராட்டத்தை தாண்டி இன்று குவாரி அமைக்க அரசு அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் கனிமவளத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் 80 க்கும் மேற்பட்டோர் குவிந்து உள்ள நிலையில் பாதுகாப்பு கருதி நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளார்கள் இந்நிலையில் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கரடிப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலகத்தின் முன்பு அமர்ந்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் ஒருபுற மக்கள் தரையில் அமர்ந்து போராடும் நிலையில் மறுபுறம் போலீஸ் பாதுகாப்புடன் அரசு அனுமதி வழங்கப்பட்ட பகுதியில் மணல் அள்ளும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது தொடர்ந்து அப்பகுதி மக்கள் எங்களை அகதிகளாக அறிவிங்கள் எங்களுடைய கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்கவில்லை என கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் கரடிபுத்தூர் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது

Similar News